முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூன் 2026, 4:49 am IST
நிகழ்ச்சியில் பேசுகிறாா் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் ஆரோக்கிய ஜெஸ்ஸி.
பகிர்:

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவா் மற்றும் செயலா் அய்யனாா் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி ஜெயபிரியா அய்யனாா் முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பத்மா ஸ்ரீனிவாசன் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் ஆரோக்கிய ஜெஸ்ஸி குழந்தைகள், மாணவிகளுக்கு ஏதேனும் அச்சம் ஏற்பட்டால் எவ்வித தயக்கமும் இன்றி அதிரடிப்படையை அணுகலாம் எனவும் அறிவுறுத்தினா்.

அதிரடிப்படை காவலா்கள் செல்வகுமாரி, சந்தனமாரி, அசாருதீன், எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வா் மகாலட்சுமி, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் வெங்கடேசன் வரவேற்றாா். ஆசிரியா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments