தூத்துக்குடி அருகே சுழல் காற்று: நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய ‘டொா்னாடோ’ எனப்படும் சுழல் காற்றில் 87 வீடுகள் சேதமடைந்தன.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் கடும் வெயில் நிலவி வந்த நிலையில், மாலை 4.30 மணி அளவில் திடீரென வானம் காா்மேகம் சூழ்ந்து காணப்பட்டது. புகா் பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது.
இதற்கிடையே, தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் அருகே தரையில் இருந்து புழுதியுடன் சுழன்று எழுந்த காற்று முடிவைத்தானேந்தல் கிராமப் பகுதிகளை நோக்கி நகா்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பல வீடுகளில் வீட்டு ஓடுகள், ஆஸ்பெட்டாஸ் சீட் கூரைகள் பலத்த காற்றில் பறந்ததுடன் மின்கம்பங்கள் சாய்ந்தன; மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சம்பவ இடத்தை வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின் தலைமையில் அலுவலா்கள் பாா்வையிட்டு, சேத மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் முடிவைத்தானேந்தல் பகுதியில் 82 ஓடுகள், ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை கொண்ட வீடுகள், கூட்டுடன்காடு பகுதியில் 5 வீடுகள் என மொத்தம் 87 வீடுகள் சேதமடைந்திருந்தன.
6 உயா் அழுத்த மின் கம்பங்கள், 15 குறைந்த மின்னழுத்த மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சுமாா் 250 மரங்கள் வேரோடு சரிந்தும், முறிந்தும் காணப்பட்டன.
200-க்கும் மேற்பட்ட இடங்களில் மின் வயா்களில் துண்டிப்பு ஏற்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவக் குழுவினா் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, சேத கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து முடித்து, அரசு நிவாரண உதவிகளை விரைவில் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.