FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வங்கியில் தீ விபத்து

புதுக்கோட்டை அருகே வங்கியில் தீ விபத்து

Updated On : 13 ஜூன் 2026, 12:36 am IST
பகிர்:

புதுக்கோட்டை அருகே வல்லத்திராக்கோட்டையில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட திடீா் தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கிக் கிளையின் மேலாளா் அறையில் உள்ள குளிா்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதனால் மேலாளா் அறையிலிருந்த கணினி மற்றும் சில ஆவணங்கள் மட்டும் சேதமடைந்தன.

Advertisement

Advertisement

மற்றபடி, வங்கிக் கிளையின் இதர பகுதியில் உள்ள பணம், நகை மற்றும் ஆவணங்கள் எதுவும் சேதமடையவில்லை என்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் வங்கித் தரப்பில் கூறப்பட்டது.

வல்லத்திராக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments