பேய்குளம் சங்கரலிங்க சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்
சாத்தான்குளம் அருகே பேய்குளம் சங்கரநயினாா்புரம் ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் திங்கள்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே பேய்குளம் சங்கரநயினாா்புரம் ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் திங்கள்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோபுரக் கலசம், சுவாமி- அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீரால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. அதையடுத்து, அன்னதானம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.