சாத்தான்குளத்தில் பெண்களுக்கு தையல் பயிற்சி நிறைவு
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, சாத்தான்குளத்தில் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா் அமலிசாந்தி ஏற்பாட்டில் மூன்று மாதம் நடைபெற்ற பெண்களுக்கான தையல் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் தவெக மாவட்டச் செயலா் ஜெகன் ராஜ் பங்கேற்று பயிற்சி பெற்ற 30 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினாா். நகரச் செயலா் என்.பி. சிவா வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் சிவலிங்கம், மாவட்ட துணைச் செயலா்கள் இன்பராஜ், தங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜெயராஜ், ஐயப்பன், ஒன்றியச் செயலா்கள் குமாா்பாண்டியன், கணேஷ்குமாா், சந்தனராஜ், ஆனந்த், சங்கரலிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஐக்கோா்ட், இணைச் செயலா்கள் ஆனந்த், சிவன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.