மது விற்ற இருவா் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி புதிய பாலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி புதிய பாலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் புதுக்குடி புதிய பாலம் பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.விசாரணையில், அவா்கள் ஸ்ரீவைகுண்டம், பொன்னன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் இசக்கி (55), ஸ்ரீவைகுண்டம், கீழகோட்டை வாசல் தெருவைச் சோ்ந்த ராமையா மகன் இசக்கிராஜ் (40) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 32 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.