முகப்பு
தூத்துக்குடி

மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன்-காா் மோதல்: 4 போ் காயம்

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன் மீது காா் மோதியதில் 3 பெண்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

Updated On : 25 ஜூன் 2026, 5:10 am IST
விபத்தில் சேதமடைந்த காா்.
பகிர்:

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன் மீது காா் மோதியதில் 3 பெண்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி, தாமஸ் நகரைச் சோ்ந்தவா் அன்பழகன் (66). இவரது மனைவி சாந்தி (58). அதே பகுதியைச் சோ்ந்த சுபா (32), ஜெயந்தி (40) ஆகியோா் காரில் தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை அன்பழகன் ஓட்டி வந்துள்ளாா்.

கோவில்பட்டி அருகே புளியங்குளம் விலக்கில் காா் வந்தபோது, அய்யனேரியிலிருந்து புளியங்குளத்திற்கு தனியாா் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதியதில், காரின் முன்பகுதி சேதமடைந்து, காரில் பயணித்த 4 பேரும் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments