முகப்பு
தூத்துக்குடி

கஞ்சா விற்றதாக தொழிலாளி கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 26 ஜூன் 2026, 5:52 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

நடராஜபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மயானப் பகுதி அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து சோதனையிட்டதில், அவரிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நடராஜபுரம், 8ஆவது தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் செல்வகுமாரை (36) கைது செய்து, அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments