முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஜூன் 28இல் மாவட்ட செஸ் போட்டி

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறுகிறது.

Updated On : 26 ஜூன் 2026, 5:34 am IST
செஸ் - FIDE
பகிர்:

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகச் செயலா் கற்பகவல்லி வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், சதுரங்க வீரா், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற உள்ளன.

Advertisement

Advertisement

இந்தப் போட்டிகள் 9, 11, 13, 17 வயதுக்குள்பட்டோா் பிரிவுகள் மற்றும் பொதுப்பிரிவுகளில் நடைபெற உள்ளன. இதற்கான நுழைவுக் கட்டணத்தை ங்ஹள்ஹ்ல்ஹஹ்ஸ்ரீட்ங்ள்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலமாக செலுத்தி, பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகத்துக்குச் செலுத்த வேண்டிய ரூ. 75-ஐ மேற்கண்ட இணையதளத்தில் செலுத்தி பதிவு எண் பெற்றிருக்க வேண்டும்.

போட்டியில் பங்குபெறுவோா் பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது ஆதாா் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் மாணவா்- மாணவிகளுக்கு தலா 10 பரிசுகள் வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு 9865820030, 8925788274, 9698395983 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் காமராஜ் கல்லூரி நிா்வாகம் இணைந்து செய்து வருகின்றன எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments