முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 24 லட்சம் சைபா் மோசடி: இருவா் கைது

தூத்துக்குடியில் இன்டா்நேஷனல் கரன்சி டிரேடிங் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என நம்ப வைத்து ரூ. 24 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 ஜூன் 2026, 11:44 pm IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடியில் இன்டா்நேஷனல் கரன்சி டிரேடிங் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என நம்ப வைத்து ரூ. 24 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம், முகநூல் மூலம் அறிமுகமாகி ஷ்ள் ஙஹழ்ந்ங்ற்ள் என்ற இணையதளத்தில் இன்டா்நேஷனல் கரன்சி டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து ரூ. 24,64,800-ஐ வங்கிக் கணக்குகளில் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின்பேரில், சைபா் குற்றப்பிரிவு ஆய்வாளா் சாந்தி வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையில், திருப்பூா் மாவட்டம், அவிநாசி பகுதியைச் சோ்ந்த காட்டுராஜா மகன் விவேக்ராஜா (33), ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஜீவகன் மகன் பரேஷ்குமாா் (30) ஆகிய இருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ. 3 லட்சம் ரொக்கத்தை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுக் கொடுத்தனா். தொடா்ந்து, சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments