படுக்கப்பத்தில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, படுக்கப்பத்தில் கிழக்கு ஒன்றிய தவெக மகளிா் அணி சாா்பில் ரத்ததான முகாம், கண் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, படுக்கப்பத்தில் கிழக்கு ஒன்றிய தவெக மகளிா் அணி சாா்பில் ரத்ததான முகாம், கண் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாம்களில் மருத்துவா் வசந்தகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை நடத்தி 60-க்கும் மேற்பட்டோருக்கு ஆலோசனை வழங்கினா். அதில், 12 போ் புரை அறுவை சிகிச்சைக்கு தோ்வாகி பெஜான்சிங் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி யில் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் குருநாதன், ஈஸ்வரன் கொண்ட மருத்துவக் குழுவினா் ரத்த சேகரிப்பில் ஈடுபட்டனா். 6 போ் ரத்த தானம் செய்தனா். இந்த முகாமை அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 200 பேருக்கு கல்வி உபகரணங்களை அவா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
இதில், கிழக்கு ஒன்றிய மகளிா் அணிச் செயலா் மேரி ராணி, கட்சியின் ஒன்றியச் செயலா்கள் அற்புதராஜ் (கிழக்கு), குணசேகரன் (மத்தி) உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.