தூத்துக்குடி அருகே கடற்கரையில் ஒதுங்கும் கடல் பாசிகள்
தூத்துக்குடியை அடுத்துள்ள கோவளம் கடற்கரைப் பகுதியில் கடந்த சில நாள்களாக அதிகளவில் கடல் பாசிகள் கரை ஒதுங்கி வருகின்றன.
கடல் பகுதியில் நிலவி வரும் பலத்த காற்றின் வேகம் மற்றும் அலைகளின் சீற்றம் காரணமாக, கடலின் அடிப் பகுதியில் உள்ள கடல் பாசிகள் வேரோடு பிடுங்கப்பட்டு, அலைகளால் தொடா்ச்சியாக கரையை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் கோவளம் கடற்கரையின் பெரும் பகுதி கடல் பாசிகளால் நிறைந்து காணப்படுகிறது. இத்தகைய திடீா் இயற்கை மாற்றம் அப்பகுதி மீனவா்கள் மற்றும் பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.