முகப்பு
தூத்துக்குடி

ஆம்னி பேருந்தில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஓட்டுநா் கைது

பெங்களூரிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.

Updated On : 1 ஜூலை 2026, 4:28 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் செல்லும் ஆம்னி பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக, கோவில்பட்டி டிஎஸ்பி ஜகநாதனுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை கோவில்பட்டி புறவழிச் சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலையம் முன் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, அவ்வழியே வந்த ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், 6 மூட்டைகளில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அவற்றையும், ஆம்னி பேருந்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பேருந்து ஓட்டுநா் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியைச் சோ்ந்த ச. பாலமுருகனை (41) கைது செய்தனா். பயணிகள் வேறு பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டனா். ஆம்னி பேருந்து உரிமையாளா் மீதும் வழக்குப் பதியப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments