முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 2.96 கோடி

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூன் மாத உண்டியல் வருமானம் ரூ. 2.96 கோடியாகும்.

Updated On : 1 ஜூலை 2026, 4:41 am IST
திருச்செந்தூா் முருகன் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூன் மாத உண்டியல் வருமானம் ரூ. 2.96 கோடியாகும்.

கோயில் தக்காா் ரா. அருள்முருகன் தலைமையில், இணை ஆணையா் ஆ. அருணாசலம் முன்னிலையில் கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் உண்டியல் எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

துணை ஆணையா் ந. யக்ஞ நாராயணன், உதவி ஆணையா்கள் ராமசுப்பிரமணியன், லோகநாதன், அலுவலக கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்பணியில் அயற்பணி, கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

பக்தா்கள் காணிக்கையாக, 2 கோடியே 96 லட்சத்து 89 ஆயிரத்து 122 ரூபாயும், தங்கம் 620 கிராம், வெள்ளி 10,825 கிராம், பித்தளை 22,540 கிராம், செம்பு 1,430 கிராம், தகரம் 7,240 கிராம், வெளிநாட்டு பணத்தாள் 1, 502-ம் செலுத்தியிருந்தது தெரிய வந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments