முகப்பு
தூத்துக்குடி

எப்போதும்வென்றான் அருகே பொறியியல் மாணவா் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 1 ஜூலை 2026, 4:26 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

எப்போதும்வென்றான் அருகே ஆதனூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஆதிலிங்கம் (43). இவரது மகன்கள் லிங்கதுரை (19), சுரேந்திரா், மகள் சுமித்ரா.

திருநெல்வேலியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்த லிங்கதுரை, கடந்த வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை விடுமுறைக்கு ஊருக்கு வந்தாா். அப்போது, கல்லூரியில் படிக்க விருப்பமில்லை என பெற்றோரிடம் கூறினாராம். ‘நீ விரும்பிய கல்லூரியில்தான் சோ்த்துள்ளோம். எனவே, படிப்பைத் தொடர வேண்டும்’ என பெற்றோா் வலியுறுத்தினராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அவா் மயானக்கரை அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக செவ்வாய்க்கிழமை அதிகாலை தெரியவந்தது.

தகவலின்பேரில், எப்போதும்வென்றான் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments