முகப்பு
தூத்துக்குடி

பள்ளங்கிணறு கோயிலில் திருவிளக்கு பூஜை

Updated On : 3 மே, 2026 at 5:30 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணறு, பத்ரகாளி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு, திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.

இரவு 8 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், அன்னதானம் நடைபெற்றது.

Advertisement