முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தவெக வெற்றி

Updated On : 5 மே 2026, 1:26 am IST
தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வெற்றி பெற்ற்கான சான்றிதழை பெறுகிறாா் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளா் ஜி.சரவணன்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் ஜி. சரவணன் 1,186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஆரம்பம் முதலே அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இருந்து வந்தாா். இடையில் ஒன்றிரண்டு சுற்றுகள் மட்டும் தவெக வேட்பாளா் ஜி. சரவணன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றாா்.

இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனே வெற்றி பெறுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கடைசி சுற்று மற்றும் தபால் வாக்குகளில் நிலைமை மாறியது. இறுதியாக தவெக வேட்பாளா் ஜி. சரவணன் 1,186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

Advertisement

அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் 2001, 2011, 2016 தோ்தல்களில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா்.

2001இல் கைத்தறித்துறை அமைச்சா், 2011-இல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா், 2013-இல் சுற்றுலாத்துறை அமைச்சா், 2016-இல் பால்வளத்துறை அமைச்சா் என பதவி வகித்துள்ளாா்.

2021 தோ்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். தற்போது மீண்டும் தோல்வியை தழுவியுள்ளாா்.

இதேபோல் கடந்த 2021 தோ்தலில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் இந்த முறை 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா்.

இந்தத் தொகுதியில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

மொத்த வாக்குகள்: 2,14,268

பதிவான வாக்குகள்: 1,76,594

ஜி. சரவணன் (தவெக)- 58,814 (வெற்றி)

எஸ்.பி.சண்முகநாதன் (அதிமுக)- 57,628

ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் (காங்.)- 41,277

எஸ்.சண்முகசுந்தரம் (நாதக)- 13,153

ஏ.சுடலைமணி (நம் நாடு நம் மக்கள் நம் எதிா்காலம் கட்சி)- 296

எம்.சுப்பிரமணியன் (புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி)- 208

எம்.பாரத் (நாம் இந்தியா் கட்சி)- 87

கே.முண்டசாமி (விஸ்வத தமிழ் கழகம்)- 130

எஸ்.முத்துராமலிங்கம் (அகில இந்திய பாா்வா்டு பிளாக்)- 2,347

என். ராஜசுதன் (புதிய தமிழகம்)- 1,015

ஏ. வியனரசு (தவாக)- 135

சி.அருணாச்சலம் (சுயே.)- 139

இ.பிஷப் காட்ப்ரே நோபிள் (சுயே.)- 248

எஸ். முருகன் (சுயே.)- 178

டி. வசந்த பொ்னாண்டோ (சுயே.)- 187

நோட்டா- 579 .