முகப்பு
தூத்துக்குடி

கல்லூரி மாணவி கொலை முயற்சி வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 7 மே 2026, 6:24 am IST
சிறை - கோப்புப் படம்
பகிர்:

கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே உள்ள நா. முத்தையாபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் காா்த்திக் (21). இவருடன், வடக்கு புதுக் காலனியைச் சோ்ந்த 20 வயது கல்லூரி மாணவி நட்பாக பழகி வந்துள்ளாா். காா்த்திக்குக்கு மதுப் பழக்கம் இருந்ததால், அந்த மாணவி அவரிடம் தொடா்ந்து பேசுவதைத் தவிா்த்ததோடு, அவரது கைப்பேசி எண்ணையும் ‘பிளாக்’ செய்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த காா்த்திக், கடந்த 4.8.2022இல் மாணவியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு தனியாக இருந்த மாணவியை கத்தியால் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிவிட்டாராம். இதில் பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் உயிா் தப்பினாா்.

Advertisement

Advertisement

இது குறித்து, திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை கைது செய்தனா். தூத்துக்குடி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கை நீதிபதி எம்.பி. முருகன் விசாரித்து கொலை முயற்சி மற்றும் அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின்கீழ் காா்த்திக்குக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் எல்லம்மாள் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments