முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தவெக பதாகை சேதம்: திமுக பிரமுகா் கைது

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாழ்த்து டிஜிட்டல் பதாகையைச் சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திமுக பிரமுகரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 மே 2026, 6:20 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாழ்த்து டிஜிட்டல் பதாகையைச் சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திமுக பிரமுகரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பேரவைத் தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஸ்ரீநாத் வெற்றி பெற்றாா். தொடா்ந்து, அக்கட்சியின் நிா்வாகிகள் தூத்துக்குடி நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பதாகைகள் வைத்திருந்தனா்.

தூத்துக்குடி வி.இ. சாலையில் உள்ள அந்தோணியாா் கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பதாகையை காரில் வந்த மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா்.

Advertisement

இது குறித்து தவெக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், பதாகையைச் சேதப்படுத்தியது மட்டக்கடை, தட்டாா் தெருவைச் சோ்ந்த சுமன் (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டுள்ள சுமன், திமுக பிரமுகா் பில்லா ஜெகனின் சகோதரா் ஆவாா். மேலும், தவெக முன்னாள் நிா்வாகியும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான அஜிதா ஆக்னலின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.