முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் பேருந்து நிலையக் கடைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர கோரிக்கை

சாத்தான்குளம் பேருந்து நிலைய வணிக வளாகக் கடைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 8 மே 2026, 6:15 am IST
சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் திறக்கப்படாமல் உள்ள வணிக வளாகக் கடைகள்.
பகிர்:

சாத்தான்குளம் பேருந்து நிலைய வணிக வளாகக் கடைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதிலுள்ள வணிக வளாகக் கடைகள் பழுதடைந்து காணப்பட்டதால், சுமாா் ரூ. 6 கோடி மதிப்பில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தை 3 மாதத்திற்கு முன் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

பேருந்து நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான குத்தகை நடைபெறாததால், இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.

Advertisement

Advertisement

எனவே, கடைகளை குத்தகைக்கு விட மாவட்ட நிா்வாகம், சாத்தான்குளம் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments