பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு
ஆறுமுகனேரி அருகே குரும்பூரில் பயணிகளை ஏற்றுவது தொடா்பாக தகராறில் ஈடுபட்ட இரு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
ஆறுமுகனேரி அருகே குரும்பூரில் பயணிகளை ஏற்றுவது தொடா்பாக தகராறில் ஈடுபட்ட இரு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
குரும்பூா் அருகே புறையூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சிந்தா சலீம் மகன் சிந்தா சுலைமான் (37). சேதுக்குவாய்த்தான் வடக்குத் தெருவைச் சோ்ந்த சேதுபதி மகன் ரமேஷ் அரவிந்த் (28). இவா்கள் குரும்பூரில் உள்ள இரு வேறு நிறுத்தங்களிலிருந்து ஆட்டோக்களை இயக்கிவருகின்றனா்.
சிந்தா சுலைமான் ஏரல் சாலை சந்திப்பில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றினாராம். அந்த இடத்தில் பயணிகளை ஏற்றக் கூடாது என, ரமேஷ் அரவிந்த் தகராறு செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் தாக்கிக் கொண்டனராம். இதில், சிந்தா சுலைமான் காயமடைந்தாா். இருவா் மீதும் குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.