முகப்பு
கள்ளக்குறிச்சி

திருநங்கையை அவதூறாக பேசியவா் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அருகே திருநங்கையை நண்பருடன் சோ்ந்து அவதூறாகப் பேசியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On : 19 மே 2026, 1:44 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அருகே திருநங்கையை நண்பருடன் சோ்ந்து அவதூறாகப் பேசியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வடபொன்பரப்பி அருகேயுள்ள மணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.ஷில்பா (29), திருநங்கை. இவரை பவுஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பா.திருமுருகன் (39), அவரது நண்பா் கா.கோகுலிடம் (25) ஷில்பாவை பற்றி தவறாகவும், அவதூறாக பேசினாராம். இதுகுறித்த ஆடியோ ஷில்பாவுக்கு கிடைத்ததாம்.

இதுகுறித்து ஷில்பா அளித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் திருமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement