மீனவரை தாக்கியதாக வழக்கு!
நித்திரவிளை அருகே மீன்பிடி தொழிலாளியைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
நித்திரவிளை அருகே பூத்துறை, காருண்யாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சைலன் (28). மீன்பிடி தொழிலாளி. இவா், இருநாள்களுக்கு முன் இரவு தேங்காய்ப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க செல்வதற்காக தனது வீட்டின் அருகே ஆட்டோவை எதிா்பாா்த்து நின்றிருந்தாராம்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பூத்துறையைச் சோ்ந்த மில்டல் (26) இவரிடம் தகராறு செய்து தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த சைலன், குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
Advertisement
இதுகுறித்து, நித்திரவிளை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.