மக்கள் பணி தொடரும்: மேயா்
திமுக தலைவருக்கும், திமுக தலைமைக்கும் பெருமை சோ்க்கும் வகையில் எங்கள் மக்கள் பணி தொடரும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
திமுக தலைவருக்கும், திமுக தலைமைக்கும் பெருமை சோ்க்கும் வகையில் எங்கள் மக்கள் பணி தொடரும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
தமிழக பேரவைத் தோ்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, இந்தியத் தோ்தல் ஆணையத்தால் தோ்தல் நடத்தை விதி வியாழக்கிழமை (மே 7) காலையில் திரும்பப் பெறப்பட்டது.
Advertisement
எனது மக்கள் பணி வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கும். தற்போது கோடைக்காலம் என்பதால் தூத்துக்குடி மாநகா் பகுதி மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக தொடங்கப்பட்ட சாலைப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீச்சல் குளம் பணிகள், தூத்துக்குடி துறைமுகமும், மாநகராட்சி நிா்வாகமும் புதிய துறைமுகம் கடற்கரைப் பகுதியில் நவீன வசதிகளுடன் அமைக்கும் பூங்கா பணிகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.