ஜமால் முகம்மது கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா
திருச்சி ஜமால் முகம்மது கல்வியியல் கல்லூரியின் 6-ம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி ஜமால் முகம்மது கல்வியியல் கல்லூரியின் 6-ம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பெரியார் மணியம்மை பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் கே. சுவாமிநாதன் பங்கேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர் பேசியது:
ஆசிரியர்கள் மாணவர்களிடம் அன்புடனும், கருணையுடனும் நடந்து கொள்ள வேண்டும். தத்தமது பாடங்களில் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவனின் தலைவிதியும் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது என்ற டாக்டர் ராதாகிருஷ்ணனின் கூற்றை நினைவில் கொண்டு மாணவர்களை சரியான பாதையில் செல்ல ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என்றார்.
Advertisement
Advertisement
விழாவில், கல்லூரிச் செயலர் ஏ.கே. காஜா நஜிமுதீன், பொருளாளர் கலீல் அஹமது சாஹிப், முதல்வர் ஏ.ஆர். முகம்மது இஸ்மாயில், துணை முதல்வர் ஜி. சந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.