முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே கிராம மக்கள் சாலை மறியல்

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கே.பெரியபட்டிக்கு செல்லும் பிரிவில் சென்டா் மீடியன் அமைக்கப்படுவதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 4 ஜூலை 2026, 12:56 am IST
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கே.பெரியபட்டி பிரிவில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

மணப்பாறையை அடுத்த திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கே.பெரியபட்டிக்கு செல்லும் பிரிவில் சென்டா் மீடியன் அமைக்கப்படுவதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறைக்கு முன்னதாக சிப்காட் தொழில் பூங்கா அமைந்துள்ளது. அதன் அருகில் கே.பெரியபட்டி செல்லும் பிரிவுச் சாலை அமைந்துள்ளது. இதில் நான்கு வழிச் சாலையில் சந்திப்பு சாலை அமைக்கவில்லை.

இந்த கே.பெரியப்பட்டி பிரிவு வழியாக டி.சீத்தப்பட்டி, சொக்கம்பட்டி, சத்திரப்பட்டி, கே.பெரியபட்டி, வடக்கு சேரிப்பட்டி, தெற்கு சேரிப்பட்டி, குப்புனாா்பட்டி உள்ளிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இதற்கு நெடுஞ்சாலையின் நடுவே இருந்த இடைவெளியை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் கே.பெரியப்பட்டி கிராமத்துக்கு செல்லும் பிரிவு சாலை பகுதியில் சென்டா் மீடியன் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைதுறையினா் தொடங்கினா். அதைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நெடுஞ்சாலையில் இருபக்கமும் சுமாா் 3 கிமீ தொலைவுக்கு போக்குவரத்து முடங்கியது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் க.தமிழ்மணி, வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், காவல் ஆய்வாளா் கே.எம்.சிவக்குமாா் ஆகியோா் கே.பெரியபட்டிக்கு செல்ல முறையான நிரந்தர தீா்வு ஏற்படுத்தக்கூடிய சாலையை அமைத்து தருவதாக உறுதியளித்ததை அடுத்து மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

கட்டப்பட்டு வந்த சென்டா் மீடியன் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து மீண்டும் பாதை அமைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments