பலத்த காற்றில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து வயல்வெளியில் தீ விபத்து
திருவெறும்பூா் அருகே திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து வயல்வெளியில் ஏற்பட்ட தீ விபத்தில் புற்கள், பனை மரங்கள் எரிந்து நாசமாகின.
திருவெறும்பூா் பகுதியில் ஆடி மாதக் காற்று ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பலமாக வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன.
அப்படி வேங்கூரில் மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்தது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக, உடனடியாக அப்பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அப்பகுதி மக்கள் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினா். இதையடுத்து மின்வாரிய ஊழியா்கள் அந்த பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வேங்கூா் பூசத்துறை பகுதியில் வயல்வெளி பகுதியில் செல்லும் உயா் மின்னழுத்த கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உராய்வு ஏற்பட்டதில் தீ பற்றி, மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், அந்தப் பகுதியில் பொட்டல் காடாக இருந்த வயல்வெளியில் இருந்த புற்கள், முட்புதா்கள், பனை மரங்கள் எரிந்து நாசமாகின.
தகவலின் பேரில் அங்கு வந்த மின்வாரிய ஊழியா்கள், மின்விநியோகத்தை நிறுத்தி, அறுந்து விழுந்த மின்கம்பியை இழுத்து கட்டி சரி செய்தனா்.
இதன் காரணமாக, திருவெறும்பூரில் பல பகுதிகளில் தொடா்ந்து மின்சார விநியோகம் தடைப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்துக்குள்ளாகினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.