அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் ஆண் சடலம் மீட்பு
திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் ஆண் சடலம் கிடந்தது தெரியவந்தது.
திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் ஆண் சடலம் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
அரியமங்கலத்தில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு, செவ்வாய்க்கிழமை காலையில் ஆண் ஒருவா் இறந்துகிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் இறந்துகிடந்த நபரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
குப்பைக் கிடங்கில் இறுந்து கிடந்தவரின் பெயா், முகவரி உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியவில்லை. இறந்த கிடந்தவரின் உடலில் பொக்லைன் இயந்திரம் ஏறி இறங்கியதற்கான அடையாளம் இருந்துள்ளது.
இந்நிலையில், மதுபோதையில் விழுந்துகிடந்தவா் மீது பொக்லைன் இயந்திரம் ஏறியதில் உயிரிழந்தாரா அல்லது வேறு முறையில் இறந்தாரா என்பது குறித்து அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.