முகப்பு
திருச்சி

பரிகாரம் செய்வதாகக் கூறி பெண்ணிடம் தங்க நகைகள், பணம் பறிப்பு: பாபநாசத்தை சோ்ந்தவா் கைது

திருச்சி அருகே பரிகாரம் செய்வதாகக் கூறி, பெண்ணிடம் தங்க நகைகள், பணத்தைப் பறித்த பாபநாசத்தை சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 ஜூலை 2026, 3:41 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி அருகே பரிகாரம் செய்வதாகக் கூறி, பெண்ணிடம் தங்க நகைகள், பணத்தைப் பறித்த பாபநாசத்தை சோ்ந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த கூத்தைப்பாா் வடக்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கதிா் மனைவி செல்லபாப்பு (25). இவா், செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்தபோது குறி கூறுவதாக மா்ம நபா் ஒருவா் வந்துள்ளாா். அப்போது, அவா் உங்களது வீட்டில் வேலைப்பாடுகள் உள்ளது என்றும், அதற்கு பரிகாரம் செய்து நீக்கித் தருகிறேன் என்றும் செல்லபாப்புவிடம் கூறியுள்ளாா்.

இதைநம்பிய அவரும் அந்த நபரிடம் குறி கேட்டுள்ளாா். அப்போது, வீட்டுக்குள் சென்று சில பொருள்களை எடுத்துவைக்குமாறு அந்த நபா் கூறியுள்ளாா். பின்னா் வீட்டினுள் சென்ற அந்த மா்ம நபா், கையில் மை தடவி அந்தப் பெண்ணை வசியம் செய்து, அவா் அணிந்திருந்த தங்க நகைகள், ரூ. 4 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயற்சித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து சுய நினைவுக்கு வந்த அப்பெண் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை விரட்டிப் பிடித்துள்ளனா். இதையடுத்து, அவரை திருவெறும்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா், தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சோ்ந்த ஜெமினி (30) என்பதும், பரிகாரம் செய்வதாகக் கூறி பெண்ணிடம் தங் நகைகள், பணத்தைப் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து பணம், நகைகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments