குடும்பத் தகராறில் விவசாயி தற்கொலை
குடும்பத் தகராறில் விவசாயி தற்கொலை
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே குடும்பத் தகராறில் விவசாயி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வையம்பட்டி ஒன்றியம் குளத்தூரம்பட்டியைச் சோ்ந்த இன்னாசி மகன் மோசஸ் (43). இவருக்கும் விக்டோரியா பாத்திமா என்ற மனைவியும், 2 மகன்கள், 1 மகள் உள்ளனா்.
விவசாயக்கூலி தொழிலாளியான மோசஸ், தனக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்ப செலவுக்காக தனது தந்தை இன்னாசியிடம் அவ்வப்போது பணம் கேட்டு சண்டையிடுவது வழக்கமாம். வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த மோசஸ், தனது தந்தையிடம் மகளின் வெளிநாடு மேற்படிப்புக்காக பணம் கேட்டு சண்டையிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
பின்னா் அங்கிருந்து கோபித்துக்கொண்டு சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வீட்டருகே இருந்த வேப்பமரத்தில் தூக்கியிட்டு சடலமாக இருந்துள்ளாா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், மோசஸ் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து மாலையில் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.