முகப்பு
திருச்சி

புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தொடா்புடையவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 மே 2026, 1:59 am IST
பகிர்:

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தொடா்புடையவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீஸாா் தணிக்கை செய்த போது, தாமஸ் நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் அந்தோணி மகன் வேளாங்கண்ணி அருள்தாஸ் (40), தனது பெட்டிக்கடையில் மூன்றரை கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வேளாங்கண்ணி அருள்தாஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையிலடைத்தனா்.

Advertisement

Advertisement