குருவாயூா் ரயில் வழித்தட மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக குருவாயூா் ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
பொறியியல் பணிகள் காரணமாக குருவாயூா் ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகளால் குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29 ஆம் தேதிகளில் சோரனூா் ரயில் நிலையத்தைத் தவிா்த்து திரிசூா், பாலக்காடு, பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது (16127) வரும் 27, 28, 29 ஆம் தேதிகளில் சோரனூா் ரயில் நிலையத்தைத் தவிா்த்து திண்டுக்கல், பொள்ளாச்சி, பாலக்காடு, திரிசூா் வழியாக இயக்கப்படும்.
Advertisement
Advertisement