முகப்பு
திருச்சி

பொறியியல் பணிகள்: காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்களின் சேவைகளும் மாற்றப்பட்டுள்ளன.

Updated On : 13 மே 2026, 12:56 am IST
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்களின் சேவைகளும் மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 13, 14, 15, 16, 18, 19 ஆகிய நாள்களில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

Advertisement

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 13, 14, 15, 16, 18, 19-ஆம் தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயக்கப்படும்.

வழித்தட மாற்றம்...: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 14, 15, 16, 17, 18, 19-ஆம் தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது வரும் 14, 17-ஆம் தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்தைத் தவிா்த்து, மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 16 ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் விரைவு ரயிலானது (17070) வரும் 15 ஆம் தேதியும் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயிலானது (16363) வரும் 20 -ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

காலதாமதம்...: வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா விரைவு ரயிலானது (17316) வரும் 19-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 60 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.