பொறியியல் பணிகள்: காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது றித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 6, 7, 8, 9, 11, 12 ஆம் தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.
Advertisement
மறுமாா்க்கத்தில் காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 6, 7, 8, 9, 11, 12 ஆம் தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.
திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 8, 10, 12 ஆம் தேதிகளில் திருச்சி - இருகூா் வரை மட்டுமே இயக்கப்படும். பணிகள் முடிந்ததும் இந்த ரயிலானது இருகூா் - பாலக்காடு இடையே முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும்.
வழித்தட மாற்றம்: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ஆம் தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 7, 10 ஆம் தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்தைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 9 ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் விரைவு ரயிலானது (17070) வரும் 8 ஆம் தேதியும் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (17070) வரும் 6, 7, 8, 10, 11, 12, 13 ஆம் தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயிலானது (16363) வரும் 6, 13 ஆம் தேதிகளிலும், தூத்துக்குடி - கச்சிகுடா விரைவு ரயிலானது (17616) வரும் 6, 13 ஆம் தேதிகளிலும் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
காலதாமதம்: காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயிலானது (56817) வரும் 6, 7, 8, 9, 11, 12 ஆம் தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 20 நிமிஷங்கள் தாமதமாக நின்று செல்லும்.
குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 13 ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 45 நிமிஷங்கள் தாமதமாக நின்று செல்லும்.