முகப்பு
திருச்சி

பொறியியல் பணிகள்: ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்

Updated On : 16 ஜூன் 2026, 1:27 am IST
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

பொறியியல் பணிகள் காரணமாக ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) ஜூன் 18, 19, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

Advertisement

Advertisement

நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) ஜூன் 18, 21 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) ஜூன் 20-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் விரைவு ரயிலானது (17070) ஜூன் 19-ஆம் தேதியும் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) ஜூன் 17, 18, 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

காலதாமதம்: திருச்சி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது ஜூன் 19- ஆம் தேதி 45 நிமிஷங்கள் காலதாமதமாக புறப்படும்.

திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது வரும் 23 ஆம் தேதி 25 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.

காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயிலானது ஜூன் 17, 18, 19, 20, 22, 23 ஆகிய தேதிகளில் 25 நிமிஷங்கள் காலதாமதமாக புறப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது ஜூன் 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் 25 நிமிஷங்களும், 22, 24 ஆகிய தேதிகளில் 15 நிமிஷங்களும் தேவைப்படும் இடங்களில் காலதாமதமாக நின்று செல்லும்.

தூத்துக்குடி - கச்சிகுடா விரைவு ரயிலானது ஜூன் 17-ஆம் தேதி 55 நிமிஷங்கள் தேவைப்படும் இடங்களில் காலதாமதமாக நின்று செல்லும்.

நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது ஜூன் 18, 21 ஆகிய தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 45 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.

எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயிலானது ஜூன் 18- ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் காலதாமதமாக நின்று செல்லும்.