முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி- கச்சிகுடா விரைவு ரயில் சேவையில் மாற்றம்

தூத்துக்குடி-கச்சிகுடா விரைவு ரயில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் ஜூன் 10, 17ஆம் தேதிகளில் 50 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 6 ஜூன் 2026, 7:36 am IST
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி-கச்சிகுடா விரைவு ரயில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் ஜூன் 10, 17ஆம் தேதிகளில் 50 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை கோட்ட ரயில்வே பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. பல்வேறு ரயில்கள் இயக்கப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி, தூத்துக்குடி-கச்சிகுடா விரைவு ரயில் (17616) ஜூன் 10 மற்றும் 17ஆம் தேதிகளில் 50 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement