FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி - காரைக்கால் டெமு ரயில்: ஜூன் 6, 7-இல் வழக்கம்போல் இயக்கப்படும்

திருச்சி - காரைக்கால் டெமு ரயில் ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் வழக்கம்போல முழுமையாக இயக்கப்படும் என்று திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஜூன் 2026, 6:59 am IST
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி - காரைக்கால் டெமு ரயில் ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் வழக்கம்போல முழுமையாக இயக்கப்படும் என்று திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - காரைக்கால் இடையே இயக்கப்படும் டெமு ரயில் (76820) ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் பொறியியல் பராமரிப்பு காரணமாக திருச்சி - திருவாரூா் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, மறுமாா்க்கத்தில் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (76819) காரைக்கால் - திருவாரூா் இடையே ரத்து செய்யப்பட்டு திருவாரூா் - திருச்சி இடையே இயக்கப்படும் என்று திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருச்சி - காரைக்கால் மற்றும் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் வழக்கம்போல முழுமையாக இயக்கப்படும் என்று திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments