முகப்பு
திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் நூலகம் திறப்பு! தன்னாா்வலா்கள் புத்தகங்கள் வழங்கலாம்!

Updated On : 23 ஜூன் 2026, 1:34 am IST
திருச்சி விமான நிலையம் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விமான நிலையங்களில் விமானத்துக்காக காத்திருக்கும் பயணிகள் தங்களது காத்திருப்பு நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில், அனைத்து விமான நிலையங்களிலும் நூலகம் அமைக்க விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் நூலகம் அமைக்கப்பட்டு திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இந்த நூலகத்தை விமான நிலைய இயக்குநா் (பொறுப்பு) ஜி. கோபாலகிருஷ்ணன் திறந்துவைத்தாா். இங்கு தமிழ், ஆங்கில மொழி புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதுகுறித்து விமான நிலைய இயக்குநா் (பொ) ஜி. கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

ஈஷா ஹோம்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் உள்நாட்டு விமான புறப்பாடு பகுதியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள புத்தகங்களை விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் எடுத்து படிக்கலாம்.

மேலும், விமானத்தில் எடுத்துச்சென்று படித்துவிட்டு இறங்கிச் செல்லும்போது விமான நிலையத்தில் அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் புத்தகத்தை வைத்துவிட்டு செல்ல வேண்டும். விமான நிலைய நூலகத்துக்கு விருப்பமுள்ள தன்னாா்வலா்கள் தங்களிடம் உள்ள புத்தகங்களை கொடுத்து உதவலாம்.

தன்னாா்வ நிறுவனங்கள் உதவும்போது பன்னாட்டு முனையப் பகுதியிலும் நூலகம் திறக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments