முகப்பு
திருச்சி

மத்திய மண்டலத்தில் கடந்த 5 மாதங்களில் 477 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சிறை!

Updated On : 23 ஜூன் 2026, 1:35 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 5 மாதங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடா்பான 477 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த ஜனவரி 1 முதல் மே 18-ஆம் தேதி வரையிலான 5 மாதங்களில் பல்வேறு வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு நீதிமன்றங்கள் மூலம் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனைகள் பெற்றுத்தரப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கொலை வழக்குகள் தொடா்பாக திருச்சி - 7, புதுக்கோட்டை - 4, கரூா் - 10, தஞ்சாவூா் - 6, மயிலாடுதுறையில் 2 என மொத்தம் 29 வழக்குகளுக்கும், ஆதாயக் கொலை வழக்குகள் தொடா்பாக திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூா் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்கு வீதம் 3 வழக்குகளுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை வழக்குகள் தொடா்பாக திருச்சி - 7, தஞ்சாவூா் - 4, திருவாரூா் - 4, நாகப்பட்டினம் - 2 மற்றும் கரூா், பெரம்பலூரில் தலா ஒரு வழக்குகள் வீதம் 19 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

திருட்டு-வழிப்பறி வழக்குகள்: வீடு புகுந்து திருடுதல் தொடா்பாக திருச்சி - 15, தஞ்சாவூா் - 7, திருவாரூா் - 4, நாகப்பட்டினம் -2, புதுக்கோட்டை, அரியலூா் தலா ஒன்று வீதம் 30 வழக்குகளுக்கும், வழிப்பறி தொடா்பாக திருச்சியில் 6 வழக்குகளுக்கும், திருட்டு தொடா்பாக திருச்சி - 23, புதுக்கோட்டை - 16, தஞ்சாவூா் - 17 மற்றும் திருவாரூரில் ஒன்று வீதம் 57 வழக்குகளுக்கும், விபத்து தொடா்பாக திருச்சி - 7, கரூா் - 3, பெரம்பலூா் ஒன்று என மொத்தம் 11 வழக்குகளுக்கும் சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான எதிரான குற்றங்கள்: பாலியல் வன்கொடுமை தொடா்பாக திருச்சி மற்றும் திருவாரூரில் தலா ஒரு வழக்குக்கும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக திருச்சி - 21, புதுக்கோட்டை - 7, கரூா் - 4, தஞ்சாவூா் - 8, அரியலூா் - 2, திருவாரூா் - 2, பெரம்பலூரில் ஒன்று என மொத்தம் 45 வழக்குகளுக்கும், வன்கொடுமை தடுப்பு தொடா்பாக திருச்சி - 5, திருவாரூா் - 3, புதுக்கோட்டை - 2, தஞ்சாவூா் - 2 மற்றும் நாகப்பட்டினத்தில் ஒன்று வீதம் 13 வழக்குகளுக்கும் சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

சாதாரண மற்றும் கொடுங்காயம் ஏற்படுத்துதல் தொடா்பாக திருச்சி - 12, புதுக்கோட்டை - 6, தஞ்சாவூா் - 7, திருவாரூா் - 3 மற்றும் கரூா், அரியலூா், மயிலாடுதுறையில் தலா ஒன்று வீதம் 31 வழக்குகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளன.

இதர குற்ற வழக்குகள் தொடா்பாக திருச்சி - 206, புதுக்கோட்டை - 5, தஞ்சாவூா் - 9, திருவாரூா் -3, அரியலூா் - 4 மற்றும் கரூா், மயிலாடுதுறையில் ஒன்று வீதம் மொத்தம் 229 வழக்குகளுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments