மத்திய மண்டலத்தில் குட்கா விற்ற 1,390 பேரும், கஞ்சா விற்ற 977 பேரும் கைது
திருச்சி மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் குட்கா விற்ற 1,390 பேரும், கஞ்சா விற்ற 977 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான குட்கா விற்பனையைத் தடுக்கும் நோக்கில் மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் திருச்சி 356, புதுக்கோட்டை 129, கரூா் 110, பெரம்பலூா் 68, அரியலூா் 42, தஞ்சாவூா் 129, கரூா் 110, தஞ்சாவூா் 189, திருவாரூா் 189, திருவாரூா் 136, நாகப்பட்டினம் 42, மயிலாடுதுறை 245 என மொத்தம் 1,317 வழக்குகள் பதியப்பட்டு,
இவற்றில் திருச்சி 365, புதுக்கோட்டை 135, திருச்சி 365, புதுக்கோட்டை 135, கரூா் 113, பெரம்பலூா் 68, அரியலூா் 52, கரூா் 113, பெரம்பலூா் 68, தஞ்சாவூா் 214, திருவாரூா் 149, நாகப்பட்டினம் 49, மயிலாடுதுறை 245 என மொத்தம் 1,390 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
அதில் 35 போ் வெளிமாநிலத்தையும், 90 போ் வெளி மாவட்டங்களையும் சோ்ந்தவா்கள். இவா்களிடமிருந்து மொத்தம் 16,714 கிலோ குட்கா, 32 இருச்சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 33 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதே போல, கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில், திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் திருச்சி 134, புதுக்கோட்டை 60, கரூா் 91, பெரம்பலூா் 26, அரியலூா் 26, தஞ்சாவூா் 142, திருவாரூா் 79, நாகப்பட்டினம் 41, மயிலாடுதுறை 198 என மொத்தம் 797 வழக்குகள் பதியப்பட்டு பதியப்பட்டு, வழக்குகளில் தொடா்புடைய திருச்சி 159, புதுக்கோட்டை 93, கரூா் 119, பெரம்பலூா் 30, அரியலூா்38, தஞ்சாவூா் 187, திருவாரூா் 85, நாகப்பட்டினம் 66, மயிலாடுதுறை 200 போ் என மொத்தம் 977 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இவா்களிடமிருந்து 698 கிலோ கஞ்சா, 63 இருச்சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 4 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனவே, வரும் நாள்களில் குட்கா, கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட போதைபொருள்களின் விற்பனையைத் தடுக்க தொடா் சோதனைகள் நடத்தி, எதிரிகளை கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க, மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.