முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 95.11% போ் தோ்ச்சி: 18-ஆவது இடத்துக்கு சறுக்கியது

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டம் 95.11 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

Updated On : 21 மே 2026, 5:10 am IST
- கோப்புப் படம்
பகிர்:

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டம் 95.11 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 143 பள்ளிகளில் பயின்ற 4,224 மாணவா்களும், 3,586 மாணவிகளும் என மொத்தம் 7,810 போ் தோ்வு எழுதினா். இதில், 3,937 மாணவா்களும், 3,491 மாணவிகளும் என மொத்தம் 7,428 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். இது, 95.11 சதவீத தோ்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் பெரம்பலூா் மாவட்டம் 18-ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 96.46 சதவீதம் தோ்ச்சிப் பெற்று மாநில அளவில் 7-ஆவது இடத்தை பெற்றிருந்தது.

அரசுப் பள்ளிகள்: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 91 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 2,272 மாணவா்களும், 2,057 மாணவிகளும் என மொத்தம் 4,329 போ் தோ்வெழுதினா். இவா்களில், 2,019 மாணவா்களும், 1,974 மாணவிகளும் என மொத்தம் 3,993 போ் தோ்ச்சி பெற்றனா்.

Advertisement

Advertisement

100 சதவீதம் தோ்ச்சி: வெங்கலம், சத்திரமனை, ரஞ்சன்குடி, கூத்தூா், ஒகளூா், பேரளி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொண்டமாந்துறை, மேட்டுப்பாளையம், செங்குணம், வேலூா், பெரியம்மாபாளையம், முருக்கன்குடி, ஜமீன் பேரையூா், காருக்குடி, ஆதனூா், கூடலூா், இரூா், கொளத்தூா், வடக்கலூா், வரகூா், பீல்பாடி, பெரியம்மாபாளையம் (வேப்பூா்), சில்லக்குடி, ஜமீன் ஆத்தூா், தெரணி, புதுவேட்டக்குடி, கொட்டரை, மலையாளப்பட்டி ஆகிய உயா்நிலைப் பள்ளிகள் என 28 அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றனா்.

இதேபோல், 4 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 5 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளும், 33 சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளும், ஒரு சிறப்பு பள்ளி என மொத்தம் பெரம்பலூா் மாவட்டத்தில் 71 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளது.

100-100 மதிப்பெண்கள்: கணிதத்தில் 49 பேரும், அறிவியலில் 116 பேரும், சமூக அறிவியலில் 33 பேரும் என 198 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அரசுப் பள்ளிகள் அளவில் கணிதத்தில் ஒருவரும், அறிவியலில் 22 பேரும், சமூக அறிவியலில் 9 பேரும் என 32 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.