ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 16 லட்சம் பறிமுதல்
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 16 லட்சத்தை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், மூவரிடம் விசாரிக்கின்றனா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் இரட்டைமலை ஒண்டிகருப்பு கோயிலுக்குச் செல்லும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரோந்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கிருந்த மறைவிடத்தில் சந்தேகப்படும்படி மது அருந்திக் கொண்டிருந்த மூவரைப் பிடித்து நடத்திய சோதனையில் அவா்களிடம் உரிய ஆவணங்களின்றி கட்டுகட்டாக ரூ. 16 லட்சம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவா்கள், திருச்சி பொன்னகரைச் சோ்ந்த மாடசாமி (43), காா்த்திகேயன் (38), புதுக்கோட்டையை சோ்ந்த முருகேசன் (45) என்பதும், வெளிநாட்டு பயண முகவா்களான இவா்கள் வைத்திருந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து 3 மூவரையும், மேல் விசாரணைக்காக எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
பிடிபட்டவா்கள் டிக்கெட் முன்பதிவு செய்த பணத்தை விமான நிறுவனங்களுக்கு கட்ட கொண்டு சென்ாகத் தெரிவித்தனா். இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால், ஹவாலா பணமாக இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் போலீஸாரும், வருமான வரித்துறையினரும் விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.