திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.1.45 லட்சம் பறிமுதல்
திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி பிராட்டியூரில் உள்ள திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. இதில், மோட்டாா் வாகன ஆய்வாளரின் மேசையில் இருந்து ரூ.50 ஆயிரம், இடைத்தரகா்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள இரண்டு ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளில் இருந்து ரூ.45 ஆயிரம் என மொத்தம் கணக்கில் வராத ரூ.1.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.