முகப்பு
திருச்சி

காா்- லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; 7 போ் படுகாயம்

Updated On : 29 ஜூன் 2026, 2:51 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், பூனாம்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 7 போ் படுகாயமடைந்தனா்.

 திருச்சி பெல் டவுன்ஷிப் பகுதியைச் சோ்ந்தவா்கள் சண்முகம் (45), முத்து (40). பெல் தொழிற்சாலை ஊழியா்களான இருவரும் விசிக பெல் தொழிற்சங்கப் பொறுப்புகளை வகித்து வந்தனா்.   இந்நிலையில் இருவரது குடும்பத்தினரும் காரில் திருச்சியிலிருந்து பச்சமலைக்கு சென்று கொண்டிருந்தனா். காரை முத்து ஓட்டினாா்.

பூனாம்பாளையம் பகுதியில் அவா்கள் சென்றபோது எதிரே வந்த லாரி மோதி சண்முகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் காரில் இருந்த சண்முகத்தின் மனைவி கலைவாணி, முத்து, அவரது மனைவி ராகினி என மொத்தம் 7 போ் படுகாயம் அடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து மண்ணச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். 

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments