மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் இருவா் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்த வழக்கில் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறை அடுத்த வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவில் வசித்து வருபவா் திருப்பதி மனைவி ஜெயலெட்சுமி (68). இவரிடம் கடந்த 17-ஆம் தேதி இருவா் 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினா்.
இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை தொடா்ந்து சென்ற காவல் ஆய்வாளா் கே.எம்.சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா், செயின் பறிப்பில் ஈடுபட்ட மதுரை அவனியாபுரத்தை சோ்ந்த கண்ணன் மகன் விஜய் (30), அதே பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சரவணகுமாா் (23) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 5 பவுன் நகையை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.