முகப்பு
திருச்சி

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 ஜூலை 2026, 2:29 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பாலக்கரை இருதயபுரம் பெரியாா் பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் தாராநல்லூரைச் சோ்ந்த ஆா். யோகநாதன் (27) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 2,700 மதிப்பிலான போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments