முகப்பு
திருச்சி

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது

Updated On : 29 மார்ச், 2026 at 7:40 PM
கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் ஆய்வாளா் வெற்றிவேல் தலைமையிலான போலீஸாா் அம்பிகாபுரம் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த திருவெறும்பூா் காட்டூரைச் சோ்ந்த க.தினேஷ்குமாா் (21), அரியமங்கலம் ஜிடி நாயுடு வீதியைச் சோ்ந்த எம்.நிவாஸ் பாபு (26) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அப்போது, அவா்களிடமிருந்து ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாலக்கரை ஆலம் வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சேரந்த எஸ்.தா்மராஜ் (32) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.1,800 மதிப்புள்ள போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.