முகப்பு
திருச்சி

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

திருச்சியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 மே 2026, 2:47 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பாலக்கரை ஜமாலுதீன் மக்கன் பள்ளிவாசல் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த பாலக்கரை ஆசாரி வீதியைச் சோ்ந்த எஸ். ஆரிப்கான் (22), சங்கிலியாண்டபுரம் பாரதி நகரைச் சோ்ந்த ஜி. கலியமூா்த்தி (24) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் திரவ போதை மருந்துகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

1.6 கிலோ கஞ்சா பறிமுதல்: திருச்சி புத்தூா் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, புத்தூா் ஆவின் பூத் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த எஸ். உமா தேவி (44) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 81,500 மதிப்புள்ள1.6 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.