மின்மாற்றியில் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மின்மாற்றியில் சனிக்கிழமை ஏறி ‘ப்யூஸ்’ போட முயன்ற கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் என்.பூலாம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் நல்லதம்பி மகன் இன்னாசி (50). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி சகாயமேரி, மகன், மகள் உள்ளனா். மகன், மகள் திருமணம் ஆகி தனியே வசிக்க, இன்னாசி தனது மனைவியுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை இவரது வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் , சுமாா் 50 மீட்டா் தொலைவில் உள்ள மின்மாற்றியில், மின்வாரிய அனுமதியின்றி ‘ப்யூஸ்’ போட ஏறிய இன்னாசி மின்சாரம் பாய்ந்து மின்மாற்றியின் மேலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், அவரது உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.