முகப்பு
திருச்சி

திருச்சி மத்திய சிறையில் இருந்த கைதி உயிரிழப்பு

Updated On : 11 மே 2026, 1:19 am IST
உயிரிழப்பு... - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மத்திய சிறையில் இருந்த தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறைக் கைதி உடல்நலக் குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்தவா் சி. ஜெயபால் (49). இவா் மீது தஞ்சாவூா் மாவட்டம், ரகுநாதபுரம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2025 டிசம்பா் 17-இல் இருந்து திருச்சி மத்திய சிறையில் இருந்தாா்.

இதற்கிடையே சிறுநீரக பாதிப்பால் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த இவருக்கு திடீரென சனிக்கிழமை உடல்நிலை பாதிப்பு தீவிரமடைந்தது. இதையடுத்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜெயபால் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் திருச்சி மத்திய சிறை அலுவலா் ராஜேஷ் கண்ணன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments